தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் மக்களிடம் பொறுப்பை விட வேண்டும்
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர், மக்களிடம் பொறுப்பை விட வேண்டும் என புதுக்கோட்டையில் சீமான் கூறினார்.
புதுக்கோட்டை,
சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் பிரச்சினையால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு இடத்தில் 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மக்கள் பிரச்சினைக்காக ஒன்று கூடவில்லை.
அவர்களின் பதவிக்காக தான் ஒன்று கூடியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தேர்தல் அமைப்பு முறையில் மாற்றம்
இதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தனி மனிதர்களின் அனுதாபங்களை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். நல்ல தத்துவங்களை கொண்டு அரசியல் செய்ய வேண்டும். சி்ன்னத்தை பார்த்து வாக்களிப்பது என்ற நிலையை மாற்றி, நல்ல எண்ணத்தை பார்த்து வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு மாணவர்களால் தான் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். மேலும் தேர்தல் அமைப்பு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஆட்சியை கலைத்து விட்டு...
தேர்தலில் பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களித்தால் தான் உரிமையை நாம் இழந்து விடுகிறோம். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக மக்களை ஆள போவது யார் என்ற பொறுப்பை தமிழக மக்களிடமே கவர்னர் விட வேண்டும். அதற்கு தேர்தல் தான் ஒரே வழி. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை நடத்தி யாரை வேண்டுமானாலும் தேர்ந்துதெடுத்து கொள்ளலாம்.
ஜல்லிக்கட்டு பிரச்சினை
ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது வரவேற்க தக்கதாக இருந்தாலும், இது காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட தீர்ப்பாக தான் நாம் தமிழர் கட்சி நினைக்கிறது. ஜல்லிகட்டு பிரச்சினையிலும், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையிலும் சமூக வலை தளங்களின் பங்கு அதிகமாக உள்ளது. இது வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.