கரூர் காமாட்சியம்மன் கோவில் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு
கரூர் காமாட்சியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கரூர்,
காமாட்சியம்மன் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. நேற்று காலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவில் வளாகத்தை சுற்றி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதே போல் மா விளக்கு பூஜையும் நடந்தது.
சிறப்பு அலங்காரம்
பின்னர் மாலை கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காமாட்சி யம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.