ஆரணி தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளி

ஆரணி தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளி

Update: 2017-02-15 23:00 GMT
ஆரணி,

ஆரணி கொசப்பாளையம் மல்லிபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டி.விஜயகுமார் (வயது 50). தொழிலாளி. இவர் தனது குடும்ப அட்டை தொலைந்துவிட்டதால் அதற்கு மாற்று குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ளார். அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் அவருக்கு மாற்று குடும்ப அட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் நேற்று ஆரணி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு குடும்ப அட்டை வழங்காததை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலரின் அறை முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

நேற்று எஸ்.வி.நகரத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் பவானி சென்றிருந்ததால் மாலையில் அலுவலகத்திற்கு வந்தார். இதை அறிந்த விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் பவானி கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் விஜயகுமார் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் மாற்று குடும்ப அட்டை தர இயலாது என தெரிவித்தும் தொடர்ந்து அலுவலக பணியை மேற்கொள்ளவிடாமல் தொந்தரவு செய்து வருகிறார்’ என்றார்.

இதுகுறித்து ஆரணி டவுண் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்