திருப்பூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது.

Update: 2017-02-14 22:45 GMT

திருப்பூர்,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது. அரியலூர் ஆதிதிராவிட பெண் நந்தினி படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரியும், சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த சட்டம் இயற்றக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராயல் பாஷா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகமது அஸ்லம், ஆறுமுகம் (தலித் விடுதலை கட்சி), பஷீர் (மனிதநேய மக்கள் கட்சி), பவுத்தன்(ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை), வடிவேல் (திராவிடர் முன்னணி), ஆனந்த்(ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்