சத்தியமங்கலத்தில் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து, சத்தியமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-02-14 22:00 GMT

சத்தியமங்கலம்,

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து, சத்தியமங்கலத்தில் பவானி ஆறு குடிநீர், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க விவசாயிகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் சின்னதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்புரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சண்டி, பாடவயல், தீர்க்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டி வருகிறது. அதை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். பவானி ஆற்றில் கழிவுகளை கலக்கும் காகித ஆலை, தோல் ஆலைகளை தடை செய்யவேண்டும், மின்மோட்டார் பயன்படுத்தி ஆலைகளுக்கு தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கோ‌ஷங்களாக எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்