வாலிபர் காதில் விஷத்தை ஊற்றி தாக்குதல்: டிராக்டரை கடத்தி வாய்க்காலில் தள்ளிவிட்டு சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
வலங்கைமான் அருகே வாலிபர் காதில் விஷத்தை ஊற்றி தாக்கி விட்டு, டிராக்டரை கடத்தி வாய்க்காலில் தள்ளிவிட்டு சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வலங்கைமான்,
வாலிபர் காதில் விஷத்தை ஊற்றினர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய பண்ணை நிலம் குலக்குடி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் பயன்பாட்டிற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கும், நெல் மூட்டைகள் வைப்பதற்கும் கொட்டகையுடன் கூடிய களம் குடியிருப்பு இப்பகுதியில் உள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு பரஞ்சோதியின் மைத்துனர் குமார் என்பவர் நிலங்களில் கோடை உழவு செய்வதற்காக கும்பகோணம் தனியார் டிராக்டர் நிறுவனத்தில் இருந்து சிறிய டிராக்டர் ஒன்றை பரிசோதனை உழவு செய்ய எடுத்து வந்தார். அதனை களத்து கொட்டகையில் நிறுத்தி வைத்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 22) என்பவர் இந்த களத்து கொட்டகையில் இரவு காவலாளியாக தங்கி இருந்துள்ளார். அப்போது இரவு தூங்கி கொண்டிருந்த பிரபுவின் காதில் பூச்சி மருந்தை (விஷம்) மர்மநபர்கள் ஊற்றினர். பின்னர் அவரை தாக்கினர்.
டிராக்டரை வாய்க்காலில் தள்ளி விட்டனர்
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை கடத்தி சென்ற மர்மநபர்கள் மன்னார்குடி-வலங்கைமான் மெயின்ரோட்டில் தொழுவூர் அருகே கடையாணி பாலம் அருகே உள்ள வாய்க்காலில் தள்ளிவிட்டனர். இதில் டிராக்டர் முற்றிலும் சேதம் அடைந்தது. பின்னர் படுகாயம் அடைந்த பிரபு செல்போன் மூலம் குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து குமார் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.