நகராட்சிக்கு சொந்தமான சுவரை சேதப்படுத்திய சுவீட் கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

கும்பகோணம்,
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தின் தெற்குபுறத்தில் குமார்(வயது44) என்பவருக்கு சொந்தமான சுவீட் கடை உள்ளது. இந்த கடைக்கு எதிரே கும்பகோணம் நகராட்சி சார்பில் சுவர் கட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு இந்த சுவரை சுவீட் கடை உரிமையாளர் குமார், ஆலமன்குறிச்சி மெயின்ரோட்டை சேர்ந்த செந்தில்(45), வடுவூர் தெற்கு தெருவை சேர்ந்த முருகானந்தம்(41), அண்ணலக்கிரகாரம் புதுபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(24) ஆகிய 4 பேரும் சேர்ந்து இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு ரூ.2.50லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கும்பகோணம் நகராட்சி உதவி பொறியாளர் சதீஷ்பாபு கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவீட் கடை உரிமையாளர் குமார், செந்தில், முருகானந்தம், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.