கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்
செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற வினோத் (வயது 34). கார் டிரைவர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற வினோத் (வயது 34). கார் டிரைவர். இவருக்கும் எம்.ஏ.நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ரோகினி(வயது 30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன முதலே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பாடியநல்லூர் ஜி.என்.டி. சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தது, வினோத் என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.