பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம்,
கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் பங்கீடு
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் உள்ள தண்ணீர் மூலம் நிறைவேற்றப்படுகிறது. பருவ மழை பொய்த்ததால் 4 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனை கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
இந்த தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது பூண்டி ஏரிக்கு 343 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்டலேறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 24.65 அடி தண்ணீர் உள்ளது. சென்னையில் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் 50 கனஅடி, 100 கனஅடி, 150 கன அடி, 200 கன அடி என்று அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று 300 கனஅடியாக தண்ணீரை அதிகரித்து திறக்கப்பட்டது. சென்னை மெட்ரோ போர்டுக்கு பேபி கால்வாய் மூலம் 25 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கண்டலேறு அணையிலும் தற்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்பு இல்லை. தொடர்ந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.