வெந்நீர் உடலில் கொட்டியதால் 4 வயது சிறுவன் சாவு

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவன் உடலில் வெந்நீர் கொட்டியதால் உடல் வெந்து பரிதாபமாக இறந்தான்.

Update: 2017-02-13 22:00 GMT
வெந்நீர் கொட்டியது

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நேமம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 30). இவருக்கு 4 வயதில் முகினேஷ் என்ற மகன் இருந்தான். கடந்த 10–ந்தேதி கண்ணனின் மனைவி, வீட்டில் குளிப்பதற்காக அடுப்பில் வெந்நீர் போட்டு வைத்து இருந்தார்.

அப்போது அடுப்பில் இருந்த வெந்நீர் பாத்திரம் தவறி விழுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் முகினேஷ் மீது வெந்நீர் கொட்டியது. இதில் சிறுவனின் உடல் வெந்தது. வலியால் துடித்த அவனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தை சாவு

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் முகினேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி கண்ணன் அளித்த புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்