காதலர் தினத்துக்கு எதிர்ப்பு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன போராட்டம்

உலகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

Update: 2017-02-13 21:30 GMT

திருப்பூர்,

உலகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நேற்று காலை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் போது, ஒரு ஆண் நாய், ஒரு பெண் நாய் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பெண் நாய்க்கு தாலி கட்டி திருமணம் செய்வது போன்று நடத்திக்காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு, காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்தனர்.

காதலர் தினம் என்ற பெயரில் இளம் பெண்கள் சீரழிக்கப்படுவதை தடுக்கவும், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த போராட்டத்தை நடத்துவதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்