காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி வனத்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

முத்தம்மாகுடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னக்கானல் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

Update: 2017-02-13 22:00 GMT
முத்தம்மாகுடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னக்கானல் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

 கடந்த சில நாட்களுக்கு முன்புகூட எங்கள் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய வீட்டை காட்டுயானை சேதப்படுத்தியது. நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவசாய பயிர்களையும் காட்டுயானைகள் நாசமாக்குகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு குடியிருப்பு பகுதிக்கு, காட்டுயானைகள் வருவதை தடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர். பின்னர் வனத்துறை அலுவலகம் அருகே குடிசை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்