ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருட்களை கலவையாக்கும் எந்திரம் விண்வெளி ஆய்வு மைய இயக்குனரிடம் ஒப்படைப்பு

திருவொற்றியூரில் தயாரானது ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருட்களை கலவையாக்கும் எந்திரம் விண்வெளி ஆய்வு மைய இயக்குனரிடம் ஒப்படைப்பு

Update: 2017-02-12 22:30 GMT

திருவொற்றியூர்,

விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருட்களை கலவையாக்கும் எந்திரம் திருவொற்றியூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரூ.1.20 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதனை திருவனந்தபுரத்தில் உள்ள விக்கிரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனியார் தொழிற்சாலை தொழில்நுட்ப இயக்குனர் காந்தி தலைமை தாங்கினார். விக்கிரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சிவன், எரிபொருட்களை கலவையாக்கும் எந்திரத்தை பார்வையிட்டு அதை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:–

இந்தியாவில் செயற்கைகோள் செயல்பாட்டின் மூலம் வளர்ச்சியும், மக்கள் பயன்படுத்திடும் தொழில்நுட்ப முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில்தான் செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்படுகின்றது. வருகிற 15–ந் தேதி 104 செயற்கை கோள்கள் ஒரே ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்படுகிறது. இது உலக தரத்தில் இந்தியாவை பெருமை அடைய செய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்