சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 21 வீரர்கள் காயம் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 21 வீரர்கள் காயமடைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
மணப்பாறை,
ஜல்லிக்கட்டு போட்டி
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறும்.
தற்போது ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி உள்ளதால் கிராம மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
கலெக்டர் பார்வையிட்டார்
ஜல்லிக்கட்டுக்காக புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தின் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன், மணப்பாறை தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில், கிராம இளைஞர்கள் கையில் கரும்புகளை தூக்கிக் கொண்டு ஆலயத்தின் எதிரில் இருந்து ஊர் முக்கியஸ்தர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் தாரை, தப்பட்டை முழங்க வாடிவாசலுக்கு வந்தனர். பின்னர் அனைத்து காளைகளும் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்க கூடாது என்பதால் காளை துள்ளிக் துதித்து சென்றது.
சீறிப்பாய்ந்தன
அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காளைகள் வாடிவாசலை விட்டு சீறிப்பாய்ந்து சென்றன. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் ஓடின.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், நாற்காலி, மின்விசிறிகள், சில்வர், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
21 வீரர்கள் காயம்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு கைகளை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகமாக பார்த்து ரசித்தனர். இதனால் ஆரம்பம் முதல் இறுதிவரை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக இருந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணிக்கு நிறைவுபெற்றது.
ஜல்லிக்கட்டில், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் 249 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அதில் 11 காளைகள் போட்டியில் பங்கேற்க தகுதி இல்லாததால் நீக்கம் செய்யப்பட்டன. காளையை அடக்க 341 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் காளைகள் முட்டியதில் 21 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.