நாகையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,415 வழக்குகளுக்கு தீர்வு

நாகை மாவட்டம் முழுவதிலும் நிலுவையில் இருந்த வழக்குகள் முடித்து வைப்பதற்கான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நாகை கோர்ட்டில் நடை பெற்றது.

Update: 2017-02-12 22:30 GMT
நாகப்பட்டினம்,

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி செல்வசுந்தரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகள் குறித்து விசாரித்தனர். இதில் 111 வாகன விபத்து வழக்கு, 15 காசோலை மோசடி வழக்கு, 8 நில ஆர்ஜித வழக்கு, 49 சிவில் வழக்கு 1,105, 127 வங்கி வழக்கு என உள்ளிட்ட 1,415 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டன.

இந்த வழக்குகளில் ரூ.4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 241-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாகை சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். 

மேலும் செய்திகள்