ஆந்திராவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு சப்–ஜூனியர் மல்யுத்த அணி பயணம்

ஆந்திராவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு சப்–ஜூனியர் மல்யுத்த அணி பயணம்

Update: 2017-02-12 22:30 GMT
சேலம்,

தேசிய அளவிலான சப்–ஜூனியர் மல்யுத்த போட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபெறுகிறது. இந்த போ ட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு சப்–ஜூனியர் மல்யுத்த அணி வீரர்–வீராங்கனைகள் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவிற்கு பயணம் மேற்கொண்டனர். தமிழ்நாடு மல்யுத்த அணியில் 20 வீரர்களும், 10 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை மல்யுத்த பயிற்சியாளர்கள் கோபிநாத், ஸ்ரீதர்குமார், மெய்ஞான மூர்த்தி, தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் ஆகியோர் அழைத்து செல்கின்றனர். சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற வீரர்–வீராங்கனைகளை, மல்யுத்த சங்க நிர்வாகிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்