யாருக்கு ஆதரவு: முகநூலில் கருத்து கேட்கும் எம்.எல்.ஏ.

யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்: முகநூலில் கருத்து கேட்கும் நிலக்கோட்டை எம்.எல்.ஏ.

Update: 2017-02-12 22:15 GMT

திண்டுக்கல்,

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து, முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை, அந்தந்த தொகுதி வாக்காளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தங்கத்துரை முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் தங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஒருசிலர் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்