சாலையோரம் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

வேலூரில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று மின்சாதன பொருட்களை ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

Update: 2017-02-12 22:15 GMT

திருவள்ளூர்

வேலூரில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று மின்சாதன பொருட்களை ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 5½ மணியளவில் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சாலை வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. மின்கம்பம் சரியாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் காயம் அடைந்தனர். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்