கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

ஊத்துக்குளியில் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

Update: 2017-02-12 21:30 GMT
ஊத்துக்குளி

ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் இருந்து ஊத்துக்குளி செல்லும் பாதையில் உள்ள சுமார் 70 அடி கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று நேற்று காலை தவறி விழுந்தது. இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மானை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். அந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வாவிபாளையம் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

இதேபோல் ஊத்துக்குளி அருகில் உள்ள திம்மநாயக்கன்பாளையம் பகுதியில் மற்றொரு 2 வயதுள்ள ஆண் மானை நாய்கள் கடித்ததில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த மான் வனத்துறையினரால் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் பிரேதபரிசோதனை செய்யப்பட்ட பிறகு புதைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்