மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வீடு, மனை, நிலம், முகவர்கள் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்

கடலூரில், வருகிற 20–ந்தேதி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வீடு, மனை, நிலம், முகவர்கள் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்

Update: 2017-02-12 22:00 GMT

கடலூர்

கடலூரில், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20–ந்தேதி ஆர்ப்பாட்டம் செய்ய வீடு, மனை, நிலம் முகவர்கள் மாநில சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு வீடு, மனை, நிலம், முகவர்கள் மாநில சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இதற்கு மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் அசோகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் முருகன், கோபால், ஆதிநாராயணன், பிரபு, பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் வீடு, மனை, நிலம் பதிவு சம்பந்தமாக தமிழக அரசு வரைமுறைப்படுத்தப்பட்ட நிலை அறிக்கையை உருவாக்கி, கோர்ட்டில் தாக்கல் வேண்டும், இந்த அறிக்கையை அளிக்காவிட்டால் சென்னை ஐகோர்ட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய நடைமுறைகளை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20–ந்தேதி (திங்கட்கிழமை) கடலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து பேரணியாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்