கயத்தாறு அருகே லாரி மோதியதில் பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் பலி மேலும் ஒருவர் படுகாயம்
கயத்தாறு அருகே, லாரி மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கயத்தாறு,

பாதயாத்திரை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பாபநாசம் கட்டபுளியை சேர்ந்த முருகன் மகன் வனராஜ் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் பாலகிருஷ்ணன் (30), மாடசாமி மகன் மதன் (24) உள்ளிட்ட 4 பேர், நேற்று முன்தினம் காலையில் கட்டபுளியில் இருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தங்கினர். பின்னர், அந்த 4 பேரும் நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, இருக்கன்குடிக்கு பாதயாத்திரையை தொடர்ந்தனர்.
2 பேர் பலி
அவர்கள், நெல்லை – மதுரை நான்கு வழிச்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பாதயாத்திரை சென்ற வனராஜ், பாலகிருஷ்ணன், மதன் ஆகிய 3 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே வனராஜ் ரத்தவெள்ளத்தில் பலியானார். பலத்த ரத்த காயங்களுடன் பாலகிருஷ்ணன், மதன் ஆகியோர் சாலையில் கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயம் அடைந்த பாலகிருஷ்ணன், மதன் ஆகியோரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிர் இழந்தார். மதன், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
லாரி டிரைவருக்கு வலைவீச்சு
வனராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.