ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் வினியோகம் 5 நாட்கள் நிறுத்தம்

சாமியார் மடம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி இன்று முதல் வருகிற 16–ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

Update: 2017-02-12 00:07 GMT

ஆம்பூர்,

காவிரி கூட்டுகுடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் சாமியார் மடம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 16–ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்