‘தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பொய்யர்’ உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

‘‘தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பொய்யர்’’ என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

Update: 2017-02-11 23:27 GMT

மும்பை,

‘‘தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பொய்யர்’’ என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

உத்தவ் தாக்கரே பிரசாரம்

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:–

தேவேந்திர பட்னாவிஸ் ஒரு பொய்யர். அப்பட்டமான பொய்களை மட்டுமே பேசும் ஒரு முதல்–மந்திரியை மராட்டியம் பெற்றிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. மும்பை மாநகராட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் சொல்கிறார். ஆனால், வெளிப்படைத்தன்மை வி‌ஷயத்தில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் இருப்பதாக அவரது சொந்த அரசு தெரிவிக்கிறது.

தைரியம் இருக்கிறதா?

தேர்தல்களில் வெற்றி பெற முதல்–மந்திரி குண்டர்களை பயன்படுத்தினால், தேர்தல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் நான் குண்டர்களை சமாளிக்க தயாராக இருக்கிறேன். கால்வாய்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய என்னால், இறங்கி நடக்க முடியும். ஆனால், முதல்–மந்திரியால் கால்வாயில் நடந்து தன்னுடைய சட்டையை அழுக்குப்படுத்தி கொள்ள அவருக்கு தைரியம் இருக்கிறதா?. மும்பை மீது பா.ஜனதாவுக்கு எந்தவொரு பற்றும் கிடையாது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பால் தாக்கரேயின் மகன்

முன்னதாக, முன்னதாக, அவர் நேற்று 2–வது நாளாக சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அளித்த பேட்டியில், ‘‘சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் மகன் என்பதால் தான் நான் தலைவனாக இருக்கிறேன். என்னை ஒரு தலைவனாக அவர்கள் (பா.ஜனதா) ஏற்று கொண்டாலும், நான் வலிமை மிகுந்த ஒரு அமைப்பின் தலைவன்’’ என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘‘கடற்கரை சாலை திட்டத்துக்கு ஒப்புதல் பெறாமல், மும்பை அரபிக்கடலில் சிவாஜி சிலை நிறுவ எப்படி உங்களால் கற்களை பெற முடியும் என்றும், பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, நினைவக திட்டத்தை எப்படி முன் எடுத்து செல்ல போகிறீர்கள்? என்றும் பா.ஜனதாவுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்