திருப்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனை: 103 பயணிகளிடம் ரூ.45 ஆயிரம் அபராதம் வசூல்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் எடுக்காமல் ரெயில் நிலையத்துக்குள் இருப்பவர்களை கண்டறிவதற்கான திடீர் டிக்கெட் பரிசோதனை நேற்று காலை நடந்தது.

Update: 2017-02-11 22:00 GMT
திருப்பூர்,

பனியன் தொழில் நகரான திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். ரெயில் போக்குவரத்தையே தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள்,

சேலம் ரெயில்வே கோட்ட வணிக உதவி மேலாளர் ஷாஜகான் தலைமையில் கோவை, சேலம், ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்கள் 30 பேர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் டிக்கெட் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். அதுபோல் ரெயில் நிலையத்துக்குள் நடைமேடை டிக்கெட் இல்லாமல் சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்தனர். நேற்று நடந்த சோதனையில் 103 பயணிகளிடம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்