கட்டண உயர்வை வாபஸ்பெற கோரி நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை வாபஸ்பெற கோரி நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
கட்டணங்கள் உயர்வு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் ஆட்டோ எப்.சி. கட்டணம், எப்.சி. காலதாமதம் அதிகபட்ச கட்டணம், ஆட்டோ பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் காலதாமதம், ஓட்டுனர் பயிற்சி உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் கட்டணம் ஆகியவை 6 மடங்கு முதல் 30 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், இதனை வாபஸ்பெற கோரியும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும் என்றும் குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றகோரி கடந்த வாரம், ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டுக்குழு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.டி.பி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., சி.பி.எஸ்., எஸ்.டி.டி.யு., குமரி ஜில்லா ஏ.டி.பி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகோபன் தலைமை தாங்கினார். ஏ.டி.பி. சார்பில் முருகன், எல்.பி.எப். சார்பில் உதயகுமார், வக்கீல் மகேஷ், ஹெலன்டேவிட்சன், சி.ஐ.டி.யு. சார்பில் தங்கமோகன், அந்தோணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தங்களது சீருடையான காக்கிச்சட்டையை அணிந்திருந்தனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.