நாகர்கோவிலில் ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் சாவு குளிக்க சென்றபோது பரிதாபம்

நாகர்கோவிலில் ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் சாவு குளிக்க சென்றபோது பரிதாபம்

Update: 2017-02-11 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி செட்டிதெருவை சேர்ந்தவர் முத்து (வயது 55). எலக்ட்ரீசியன். இவர் நேற்று காலை ஆறாட்டு பகுதியில் உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் முத்துவைத் தேடி ஆற்றுக்கு சென்றனர். அப்போது முத்து ஆற்றில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதுபற்றி உடனடியாக வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது அவருக்கு திடீரென வலிப்பு வந்து ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்