திருவொற்றியூர் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டுமரங்களை போட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் திருவொற்றியூரில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை,

Update: 2017-01-23 23:00 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் கடற்கரை விரைவு சாலை உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றன.

அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் மீன்பிடி வலை மற்றும் கட்டுமரங்களை சாலையின் குறுக்கே போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் அண்ணாமலை ரெயில்வே கேட் பகுதியில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்