பயிர் கருகியதால் மனமுடைந்தார்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள அக்கரை கோமல் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. விவசாயி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஏக்கரில் வயல் உள்ளது. இத்துடன் கூடுதலாக ஒரு ஏக்கர் வயலில் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த வயல்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர், போதிய தண்ணீர் இன்றி கருகியது. இதனால் சாகுபடிக்கு பெற்ற கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கடன் பெற்று பச்சை பயறு சாகுபடி செய்தனர். இந்த பயிரும் தண்ணீரின்றி கருகியதால் மனமுடைந்த மணிமேகலை, அவருடைய வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.