உழைத்த பணத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு வழங்கியவர் எம்.ஜி.ஆர். இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை பேச்சு

உழைத்த பணத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு வழங்கியவர் எம்.ஜி.ஆர். என, மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-19 20:30 GMT
தூத்துக்குடி,

உழைத்த பணத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு வழங்கியவர் எம்.ஜி.ஆர். என, மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம்


தூத்துக்குடி மாநகர மேற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் தேனி பா.ராமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஏழை மக்களுக்கு...


கூட்டத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை பேசியதாவது:- மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் செல்லும் வரை ஏழைகளை நேசித்தவர் எம்.ஜி.ஆர்.

நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றார். பொது வாழ்க்கையில் 1952-ம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்ணாவின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சென்று கொள்கை காவலராக விளங்கினார். அவருடைய திரைப்பட பாடல்களை மக்களுக்கு பாடமாக்கினார். தான் உழைத்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கியவர் எம்.ஜி.ஆர்.

புதிய வரலாறு


3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு ஜெயலலிதா 4 முறை ஆட்சியில் அமர்ந்து பல திட்டங்களை தந்தார். காவிரி, முல்லைபெரியாறு பிரச்சினைகளில் சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றார். தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று உள்ளார். அவருடைய தலைமையில் தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைப்போம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்