பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
மாணவர்கள் போராட்டம்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் தமிழகத்தில் 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிட்டோரின் போராட்டம் தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயில் முன்பு நேற்று கூடினர்.
பின்னர் அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூர் போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
பீட்டாவுக்கு எதிராக கோஷம்
அப்போது மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர்.
இந்த போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், மோகன் தம்பிராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், சிவசுப்ரமணியன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பரபரப்பு
இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மேலும், தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டத்தின்போது மாணவர்களுடன் சேர்ந்து வெளிநபர் ஒருவரும் இருந்தார். இதனால் அவரை வெளியேற்ற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி விட்டு, அங்கிருந்து அவரை வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் பெரம்பலூரில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் உள்ளே அமர்ந்து கொண்டு சிறிது நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேப்பந்தட்டை
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதேபோல் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அன்னமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அரியலூரில்...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அரியலூரில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, செந்துறை ரோடு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில், முன்னாள் கல்லூரி மாணவர் களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் காளை கன்றுடன் கலந்து கொண் டனர். அப்போது அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.