சென்னை புறநகர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை புறநகர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,

கிண்டி
சென்னை கிண்டி குருநானக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வேளச்சேரி சென்று அங்கிருந்து மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.
பள்ளிக்கரணை ஜெருசலேம் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டனர். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் பழைய விமான நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, காரப்பாக்கம் என்ஜினீயரிங் கல்லூரி, கானத்தூர் பல்கலைக்கழக மாணவர்கள் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ராஜீவ்காந்தி சாலையே ஸ்தம்பித்தது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை தரமணி ‘டைடல் பார்க்கில்’ பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 300-க்கும் மேற்பட்டோர், வேலையை புறக்கணித்து விட்டு சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்.
இதேபோல் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நந்்தம்பாக்கம் துளசிங்கபுரம், பர்மா காலனி போன்ற பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நந்தம்பாக்கம் வர்த்்தக மையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு்பட்டனர்.
பூந்தமல்லி
பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து நசரத்பேட்டையில் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து மத்திய அரசு மற்றும் ‘பீட்டா’வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே பேரணியாக பூந்தமல்லி பஸ் நிலையம் வரை நடந்து சென்று நீதிமன்றம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆவடி
ஆவடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரம் பேர் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை 8.30 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சுமார் 5 கி.மீ. தூரம் வரை சி.டி.எச். சாலையில் ஊர்வலமாக ஆவடி வந்தனர்.
அம்பத்தூர்
அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாசர்பாடி
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் 700 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் பூந்தோட்டப்பள்ளியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.
தாம்பரம்
சேலையூர் அருகே கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சந்தோஷபுரம் பஸ் நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சேலையூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருங்களத்தூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் சானடோரியம் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் நேற்று மாலை சானடோரியத்தில் போராட்டம் நடத்தினர். பம்மல் பசும்பொன் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடிகர் லிவிங்ஸ்டன் ஆதரவு
சென்னை அண்ணாநகர் ரவுண்டானாவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த நடிகர் லிவிங்ஸ்டன், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
வண்டலூர்
வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தின் முன்பு நேற்று காலை திரண்ட மாணவ, மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல ரத்தினமங்கலத்தில் உள்ள தாகூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.
பொத்தேரி
பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவ, மாணவிகள் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர்.