கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ ரெயில் மறியல் மேலும் 5 இடங்களிலும் போராட்டம்
சேலம் டவுனில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பயணிகள் ரெயிலை மறித்து மாணவர்கள் ‘திடீர்‘ போராட்டம் நடத்தினர். மேலும் 5 இடங்களில் சாலைமறியல், தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.
சேலம்,
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின்பேரில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகளாக தடை நீடித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி எப்படியும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதில் தமிழக மாடுபிடி வீரர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தினாலும், தமிழக காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சியினரிடம் மட்டுமல்லாது மாணவர் சமுதாயத்தினர் இடையேயும் வலுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நேற்று மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் மறியல்
அதன்படி, சேலம் மாவட்டத்திலும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் நேற்று ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில், நேற்று மதியம் 1.15 மணிக்கு சேலம் டவுன் நிலையம் வந்தடைந்தது. அந்த வேளையில் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ரெயில் நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர்.
பின்னர் அங்கு புறப்பட தயாரான ரெயிலை மாணவர்கள் திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே தண்டவாளத்தில் கூடியும், ரெயில் என்ஜினில் ஏறி நின்றும் போராட்டம் நடத்தினார்கள். இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய் என்றும், ஜல்லிக்கட்டு நடத்திட நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாணவர்களின் ரெயில் மறியல் போராட்டம் காரணமாக ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் அஸ்தம்பட்டி போலீசார், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். பின்னர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் ரெயில் மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
நஞ்சம்பட்டியில் சாலைமறியல்
இதுபோல சேலம் மத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் உள்ள நஞ்சம்பட்டியில் நேற்று காலை 10 மணிக்கு மாணவர் அமைப்பினரும், அப்பகுதி இளைஞர்களும் ஒன்று திரண்டு திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த மறியல் போராட்டம் காரணமாக சேலம் மிலிட்டரி ரோடு-ஆத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. பின்னர் மாணவர் அமைப்பினர் மறியலை கைவிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்றனர்.
சீலநாயக்கன்பட்டியில் தர்ணா
சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, ராமையன்காடு, சண்முகாநகர், பெருமாள் கோவில்மேடு, குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.
உடனடியாக அங்கு வந்த போலீசார், எவ்வித அனுமதியின்றி மறியலில் ஈடுபடக்கூடாது என்றும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டோரமாக அமர்ந்து போராட்டம் நடத்துங்கள் என்றும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்கள் ரோட்டோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த மாணவர்களும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க திரண்டு வந்தனர்.
உண்ணாவிரதம்
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் பல ஆண்டுகளாக மூங்கில் குத்து முனியப்பன் கோவிலில் எருதாட்டம் நடத்தப்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், ஒரு மாட்டை அழைத்து வந்து பூஜை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் கிராம மக்கள் மற்றும் மூங்கில் குத்து முனியப்பன் கோவில் வகையறாக்கள் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்றும், எருதாட்டம் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சவுடேஸ்வரி கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
திருவாக்கவுண்டனூர் பைபாஸ்
சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானாவில் நேற்று மாலை 4.30 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
சேலம்-பெங்களூரு சாலையில் நடந்த மறியல் போராட்டம் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.