பெரியகுளம் அருகே இரு தரப்பினருக்கு இடையே மோதல்; சாலை மறியல்

வடுகபட்டி குலாளர் தெருவில் உள்ள வீட்டின் கதவை கடந்த 16-ந் தேதி இரவு நேரத்தில் 9-வது வார்டை சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தட்டியதாக தெரிகிறது

Update: 2017-01-17 22:00 GMT
பெரியகுளம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி குலாளர் தெருவில் உள்ள வீட்டின் கதவை கடந்த 16-ந் தேதி இரவு நேரத்தில் 9-வது வார்டை சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தட்டியதாக தெரிகிறது. உடனே அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், 9-வது வார்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து 9-வது வார்டை சேர்ந்த பால்பாண்டி, தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட குலாளர் தெருவை சேர்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று வடுகபட்டி சாலையில் 9-வது வார்டை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்து பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரன் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்