கடலூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
கடலூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
பள்ளி மாணவன்
கடலூர் அருகே பில்லாலிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன். ரேஷன் கடை ஊழியர். இவருடைய மகன் ஹரிகரன் (வயது 15). இவன் கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஹரிகரன் வீட்டில் இருந்தார். காணும் பொங்கலான நேற்று முன்தினம் கெடிலம் ஆற்றில் பில்லாலிதொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் ஒன்று கூடினர். அப்போது, ஹரிகரன் அதே பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் கெடிலம் ஆற்றுக்கு சென்று பட்டம் பறக்கவிட்டு விளையாடினான். அப்போது, ஹரிகரனின் பட்டம் அறுந்து ஆற்றங்கரையையொட்டியுள்ள ஒரு குட்டையில் விழுந்தது. இதனை பார்த்த அவன் குட்டைக்குள் இறங்கி அந்த பட்டத்தை எடுக்க முயன்றான். ஆனால், ஹரிகரன் குட்டை தண்ணீரில் மூழ்கினான். இதில் பதறிய அவனது நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே ஹரிகரனை காணவில்லை என்று அவனது பெற்றோர் பதறி, ஊர் முழுவதும் விடியவிடிய தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ஹரிகரனின் நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்த போது, குட்டையில் ஹரிகரன் மூழ்கிய சம்பவம் குறித்து தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த குட்டையில் இறங்கி தேடினர். அப்போது, குட்டையில் இருந்து ஹரிகரனை அவர்கள் பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.