அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த கோரி கடந்த நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடையடைப்பு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கிராமத்தின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. அதைதொடர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரி, க

Update: 2017-01-17 22:15 GMT

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த கோரி கடந்த நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடையடைப்பு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

 இதையடுத்து கிராமத்தின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. அதைதொடர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அலங்கார் வாடிவாசல் அருகில் தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலைந்து மறுத்து, இரவில் சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே தங்கினர். அதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகராவ் அலங்காநல்லூர் வந்து விசாரணை நடத்தினார்.

 இந்தநிலையில் நேற்று அதிகாலை கல்லூரி மாணவர்கள், மாடுபிடிவீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பெண்கள் உள்பட சுமார் 230 போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அவர்களை வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும் நேற்று காலை அலங்காநல்லூர் கிராமமக்கள் சுமார் 500 மேற்பட்டோர் பெரியாறு கால்வாய் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்