அவினாசி அருகே தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
அவினாசி அருகே தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அவினாசியை அடுத்து வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போர்வெல் தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வருவதாகவும் தினசரி போர்வெல் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வேலாயுதம்பாளையத்தில் 3 ரோடு சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில் “போர்வெல் தண்ணீர் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது. அதுவும் சிறிது நேரம் தான் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த ஒரு வருடமாக இதேநிலை தான் நீடித்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சொல்லியும் கோரிக்கை மனு கொடுத்ததும் எந்த பலனும் இல்லை. எனவே இதற்கு தீர்வு காணாமல் இந்த சாலை மறியலை கைவிடமாட்டோம்” என்று கூறினார்கள்.
பேச்சுவார்த்தை
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் அவினாசி தாசில்தார் சுப்ரமணியம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்த பெண்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தினசரி போர்வெல் தண்ணீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.