அ.தி.மு.க.செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு போலீசார் விசாரணை

குடியாத்தம் நகர அ.தி.மு.க.செயலாளராக பணியாற்றுபவர் ஜே.கே.என்.பழனி. இவரது வீடு குடியாத்தம் செதுக்கரையில் உள்ளது.

Update: 2017-01-17 23:00 GMT
குடியாத்தம்,

பழனி, தனது காரை வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு காரை அந்த இடத்தில் நிறுத்தியிருந்தார்.

நேற்று காலை பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடியை மர்மநபர்கள் கல்வீசி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.நிர்வாகிகள் அங்கு வந்து பார்த்தனர். கார் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அது குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்