சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி துண்டு பிரசுரம் வினியோகம்

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2017-01-17 22:30 GMT
கரூர்,

விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், கரூர் நகர உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவராமஜெயம், கோபிநாத், துணை முதன்மை போக்கு வரத்து காப்பாளர் தீபம் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்