ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி இளைஞர்கள் கருப்பு கொடியேந்தி சாலை மறியல்

கணக்கப்பிள்ளையூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி இளைஞர்கள் கருப்பு கொடியேந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-01-17 23:00 GMT
குளித்தலை,

சாலை மறியல்

குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கருப்பு கொடியேந்தி கணக்கப்பிள்ளையூர் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நேற்று திடீரென அய்யர்மலை- பனிக்கம்பட்டி செல்லும் சாலையில் கணக்கப்பிள்ளையூர் வாய்க்கால் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதன் பின்னர் இளைஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அய்யர்மலை- பனிக்கம்பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்