பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வசந்தகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்தகுமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

Update: 2017-01-17 20:45 GMT

நாங்குநேரி,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்தகுமார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

விளையாட்டு போட்டிகள்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ராஜாபுதூர், முதலைகுளம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் நடத்தப்பட்டது. இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது முதலைகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் கூறியதாவது:–

இன்று அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் தேடிக்கொள்வது போன்று தனக்காக எதையும் தேடாத ஒரே மனிதர் பெருந்தலைவர் காமராஜர் மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல், கோபுரம் எட்டிய தூரம் நின்று வணங்கி செல்லும் நிலையை மாற்றியவர் காமராஜர் தான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்த போராடியவர் டாக்டர் அம்பேத்கர்.

உணர்வை மதித்து...

தமிழக தலைமை செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தது உலக அளவில் நமக்கு கேவலமாக உள்ளது. லஞ்சம் வாங்குவதை இளைஞர்கள் எதிர்க்க வேண்டும். மற்றும் அதனை தட்டிகேட்க வேண்டும். ரே‌ஷன் கடைகளில் கொடுக்கப்படும் இலவச அரிசி தரமானதாக கொடுக்க வேண்டும்.

மக்கள் நீங்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளீர்கள் அந்த உணர்வை மதித்து நான் தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மருதகுளம் கிராமத்தில் மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் கவுன்சிலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இதில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். அப்போது பொதுமக்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர். அதில் குடிநீர், மருத்துவம், ரோடு, பஸ் வசதி ஆகிய வசதிகள் செய்து தரக்கோரி கூறப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. வசந்தகுமார் கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்