ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பது தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பது தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயல் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.
திருச்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
நடிகர்களுக்கு இடம் கிடையாது
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் சினிமாத்துறையில் இருந்து சாதித்து தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் இனி நடிகர்களுக்கு இடம் கிடையாது. தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறவர்களுக்கு தான் எதிர்காலம். தமிழக முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசி. அதனால் தான் அவருக்கு முதல்-அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். ஆனால் முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருக்கும்போது, இன்னொருவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று அந்த கட்சியினரே பேசுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அ.தி.மு.க.வினர் அப்படி பேசுவதற்கு அரசியல் முதிர்ச்சியின்மை தான் காரணம்.
திராவிட பாரம்பரியத்தை வளர்க்கக்கூடிய கட்சியாக தி.மு.க. உள்ளது. சாதி முலாம் பூசப்படாத ஒரே கட்சி தி.மு.க. மட்டுமே. அதனால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகிறோம். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது இல்லாத ஊருக்கு வழிதேடுவது போன்றதாகும்.
நெல்லையில் மாநாடு
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பது தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகும். குறைபாடுகளை களைய வேண்டுமே தவிர, பாரம்பரியத்தை அழிக்கக்கூடாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு வருகிற மார்ச் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கட்சி நிர்வாகிகள் நிஜாம், ஹாசீம், ஹபிபுர்ரகுமான் உள்பட பலர் உடன் இருந்தனர்.