அறிவியல் மையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகையையொட்டி 2-வது நாளாக நெல்லை அறிவியல் மையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
காணும் பொங்கல்
பொங்கல் திருவிழா கடந்த 14-ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு குடும்பத்தோடு சென்று பொழுதை கழிப்பது வழக்கம்.
இதனால் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாபநாசம் காரையாறு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதி, சொரிமுத்துஅய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, குற்றாலம், அடவிநயினார் அணை பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றனர்.
பாபநாசம் அணையில் தண்ணீர் குறைந்ததாலும், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழாததாலும் மக்கள் கேரளமாநிலம் அச்சன்கோவில் வனப்பகுதிக்கும், தென்மலை அணைப்பகுதிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று காணும் பொங்கலை கொண்டாடினார்கள். நெல்லை மாநகர பகுதியில் உள்ள மக்கள் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் குவிந்தனர். அங்கு நேற்று முன்தினம் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விடுமுறையையொட்டி நேற்று 2-வது நாளாக அறிவியல் மையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.