வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து 10 பவுன் தங்க நகைகளை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-01-16 20:42 GMT
திருச்செந்தூர்,

கூலி தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளிப்பத்து வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கசகாத்தான் (வயது 45). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகிளி. இவர்களுக்கு லட்சுமி உள்ளிட்ட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கசகாத்தானுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள சித்தா ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ராஜகிளி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து கணவரை கவனித்து வருகிறார். அவர்களுடைய 2 மகள்களும், மகனும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

நகைகள் திருட்டு

நேற்று முன்தினம் காலையில் 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். மாலையில் வீட்டுக்கு திரும்ப வந்தபோது, பீரோ திறந்து கிடந்துள்ளது. அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டு இருந்ததாம். இதனால் லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். பூட்டியிருந்து வீட்டுக்குள் மர்ம நபர் யாரோ புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்