கரும்பு பயிர்கள் கருகியதால் மனவேதனை: விவசாயி தற்கொலை

கரும்பு பயிர்கள் கருகியதால் மனவேதனை: குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை

Update: 2017-01-16 22:30 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (வயது45). விவசாயி. இவர் நேற்று மதியம் அதே ஊரில் உள்ள ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணாநிதியின் உடலை மீட்டனர். இதுகுறித்து கருணாநிதியின் மனைவி தேவகி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதில், தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகியதால் மனவேதனையில் கருணாநிதி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்