பேரணி-பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெறும் பேரணி-பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் அறிக்கை

Update: 2017-01-16 22:45 GMT
திருவிடைமருதூர்,

திருவிடைமருதூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆணைக் கிணங்க, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானாக விளங்கிய அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று(செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு திருவிடைமருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி கடைவீதி வழியாக சென்று எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைகிறது. அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நாச்சியார்கோவில் கடைவீதியில் பொதுக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார் தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர் ரா.துரைக்கண்ணு, தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான நடிகர் சரவணன், மாவட்ட செயலாளர் எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ., ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பொன்.த.மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.தவமணி, ராம.ராமநாதன், மாவட்ட ஜெயலலிதாபேரவை செயலாளர் எல்.தயாளன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பி.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்விவீரமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கே.சூரியமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.கே.பாலமுருகன் உள்பட திரளான அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்