பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்

பொங்கல் விழாவையொட்டி திருப்பத்தூர், திருப்புவனம், சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2017-01-16 19:33 GMT

திருப்பத்தூர்,

விளையாட்டு போட்டிகள்

திருப்பத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சமாதான புறா நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் இப்போட்டிகளை நடத்தினர். நிகழ்ச்சிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி, மனித வாழ்விற்கு ஒழுக்கம் அவசியமானது என்று பேசினார். மேலும் நமது கலாசார பண்பாடுகள் காக்கப்பட வேண்டும் என்றால் இதுபோன்ற விழாக்களை இளைஞர்கள் முன்னடத்திச் செல்லவேண்டும் என்றும் கூறினார். பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குனர் குறிஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சமாதானப்புற இளைஞர்மன்றத் தலைவர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

தி.மு.க. கொடியேற்றம்

திருப்புவனம் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் தைமாத பிறப்பையொட்டி மடப்புரம் விலக்கு, கரிசல்குளம், திருப்புவனம் கோட்டை ஆகிய பகுதிகளில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், சேகர், ஒன்றிய நிர்வாகிகள் போஸ், சக்தி முருகன், ரவி, காளீஸ்வரன், மகேந்திரன், நகர நிர்வாகிகள் சிக்கந்தர், முத்துக்குமார், மாரிதாஸ், மகளிரணி குழந்திபிச்சை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியம் கிருங்காகோட்டையில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் தமிழர் தேசிய முன்னணி சார்பில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். விழாவில் மாணவ–மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக திருக்குறள் ஒப்பித்தல், இசை நாற்காலி, ஒட்டப்பந்தயம், பேச்சுப் போட்டி, கவிதை வாசித்தல் போன்ற போட்டிகளும், பெண்களுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றது. பின்னர் பரிசளிப்பு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்