சிராவயலில் அனுமதி மறுப்பு: திருப்பத்தூர் பகுதி கிராமங்களில் தடையை மீறி மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதி கிராமங்களில் தடையை மீறி மஞ்சுவிரட்டும்
திருப்பத்தூர்,
தடை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இப்போட்டிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதித்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற அனுமதிக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஆண்டாவது பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கவில்லை.
இதனால் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சில இடங்களில் போலீசார் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, தடியடி நடத்தப்பட்டது. இதேபோன்று சிங்கம்புணரியிலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, மாடுபிடி வீரர்கள் காளைகளை துரத்தினர்.
சிராவயல் மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற சிராவயலில் தை மாதம் 3-ந்தேதி மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். மதுரையில் அலங்காநல்லூர் என்றால், சிவகங்கையில் சிராவயல் சிறப்பு வாய்ந்தது. ஆனால் சிராவயல் மஞ்சுவிரட்டு கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜல்லிக்கட்டுவாக மாற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின்னர் அப்போட்டிக்கு இடைகால தடை விதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று சிராவயலில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இதனையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குவிந்தனர். பின்னர் சிராவயல் கிராமத்தினர் சார்பில் வேலுச்சாமி அம்பலம் தலைமையில், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஆகியோர் கோவிலில் சாமி குப்பிட்டு கோவில் காளைகளுடன் ஊர்வலமாக வந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனர். பின்பு கோவில் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு மரியாதை செய்யப்பட்டு, அவை அவிழ்த்து விடப்பட்டன.
முன்னதாக மஞ்சுவிரட்டு திடல் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பாரம்பரிய போட்டிகள் நடத்த அனுமதிக்க கோரியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்யக்கோரியும் அறப்போராட்டம் நடத்தினர். ஆனால் சிராவயலில் மஞ்சுவிரட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்ததுடன், மஞ்சுவிரட்டு திடல் முன்பு யாரும் வராதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காளைகள் அவிழ்ப்பு
ஆனால் சிராவயல் அருகே உள்ள பரணிக்கண்மாய், ஊர்குலத்தாண்பட்டி கண்மாய், காவனூர் கண்மாய், தென்கரை, வைரவன்பட்டி, சிறுகூடல்பட்டி, சமத்துவபுரம், கம்பனூர், கும்மங்குடி உள்ளிட்ட கிராமங்களில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மேலும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பி சுற்றுவட்டார இளைஞர்கள் வயல்வெளிகளில் காளைகளை கொண்டு வந்து, அவற்றை அவிழ்த்துவிட்டனர். அப்போது சீறி பாய்ந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர்.
போலீசார் கெடுபிடி
சிராவயலில் மஞ்சுவிரட்டு நடைபெறும் என்பதால் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிராவயல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வெளியூர் நபர்கள் யாரும் செல்லாதவாறு கெடுபிடி செய்தனர். இதனால் சொந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அக்கிராமங்களுக்கு செல்ல போலீசார் அடையாள அட்டை கேட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருப்பத்தூர்-காரைக்குடி ரோட்டில் உள்ள கும்மங்குடி சாலையில் போலீசார் யாரையும் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு
இதேபோல் மானாமதுரை அருகே உள்ள கட்டிகுளம், பெருமச்சேரியில் ஆண்டுதோறும் ஜல்லிகட்டு வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தான் கட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இதனால் இவ்வாண்டு ஜல்லிகட்டு நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர். இதனையறிந்த போலீசார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகத்திடம் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கினர்.
இந்தநிலையில் கட்டிகுளத்தில் நேற்று காளைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. மானாமதுரை இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா தலைமையில் போலீசார் வாடிவாசல் அருகே பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் இளைஞர்கள் காளைகளை வழியிலேயே அவிழ்த்து விட்டனர். காளைகள் அழைத்து வரப்படுவதை காண ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் முன் கூடினர். காளைகள் சீறிப்பாய்ந்து வயல்வெளிகளில் ஓடின. அவற்றை அடக்க முடியாமல் இளைஞர்கள் தவித்தனர். போலீசாரின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
கட்டிக்குளத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கூறும்போது, ஜல்லிக்கட்டு என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதனை யாரும் கேட்கவில்லை, தடை விதிக்கவில்லை. மக்களுக்காக தான் சட்டம் இருக்க வேண்டும், சட்டத்திற்காக மக்கள் இருக்கக்கூடாது. தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு தமிழரின் கலாசாரம் குறித்து தெரிந்திருந்தால் தடை அளித்திருக்கமாட்டார்கள். பீட்டா என்ற அமைப்பு இதனை கேலிக்கூத்தாக்கியுள்ளது என்றார்.