தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய பொதுமக்கள்

தேனி அல்லிநகரம் பகுதியில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

Update: 2017-01-16 22:30 GMT

அல்லிநகரம்,

தேனி அல்லிநகரம் பகுதியில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ஆனால் தேனி பகுதியில் தடையை மீறி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் காளை மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு காவக்குடுசு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதே போல் தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டியையொட்டி, கோவில்களில் காளை மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் எருமலை நாயக்கன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். மேலும் கெங்குவார்பட்டியிலும் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது.

மேலும் செய்திகள்