காளைகளை அவிழ்த்து விட முயன்றவர்களுடன் போலீசார் வாக்குவாதம்-தடியடி
புதுக்கோட்டையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட முயன்றவர்களுடன் போலீசார் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
உச்சநீதிமன்றம் தடை
தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
இதேபோன்று நேற்று புதுக்கோட்டையில் உள்ள தடிகொண்ட அய்யனார் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் முடிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகர், சின்னப்பா நகர், புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 10 ஜல்லிக்கட்டு காளைகள் அலங்கரிக்கப்பட்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டன. இதற்காக அந்த பகுதியில் கம்புகளால் ஆன வாடிவாசலும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சிறிது நேரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட திட்டமிட்டு இருந்தனர். இதற்காக வாடிவாசலுக்குள் காளைகளை கொண்டு வந்தனர்.
போலீசார் தடியடி
அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான போலீசார் வாடிவாசல் பகுதிக்கு சென்று காளைகளை அவிழ்த்து விடுவதை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசலை பிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அந்த பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை திடலுக்குள் விரட்டி விட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் கூடிநின்ற ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிதறி ஓடினார்கள்.
பரபரப்பு
அப்போது ஒரு காளையை ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் அவிழ்த்து விட்டனர். அந்த காளையும் அங்கிருந்த கூட்டத்திற்குள் சீறிப்பாய்ந்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் கட்டி வைக்கப்பட்டு இருந்த மாடுகளை போலீசார் அவிழ்த்து விரட்டி விட்டனர்.இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று யாரும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர். புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.