திருவாரூர் அருகே வீடுகளில் விவசாயிகள்,கருப்புக்கொடி ஏற்றினர்
இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் அருகே வீடுகளில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றினர்.
திருவாரூர்,
கருப்புக்கொடி
மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் வராததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகின. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்து வருகின்றனர்.
இதற்கு எந்தவித நடவடிக்கையும், உரிய நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் அருகே கானூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, பொங்கல் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக சம்பா பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நிலை குறித்து கண்டு கொள்ளவில்லை. இதுவரை இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. இதனால் பொங்கலை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், பொங்கலை கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம் என கவலை யுடன் கூறினர்.
முத்துப்பேட்டை
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மாநில அரசு சம்பா பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததை கண்டித்தும் முத்துப்பேட்டை அருகே உள்ள மேலநம்மங்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மாலையில் கருப்புக்கொடி அகற்றப்பட்டது.